சீர்காழியில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியிலுள்ள சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழா புதனன்று (இன்று) நடைபெற்ற நிலையில் சிறப்பு தரிசனம் செய்வதற்காக வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி க்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன் ,மாவட்ட துணை செயலாளர் குமரேசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை நகர செயலாளர் விஜய் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் சீர்காழி ஒன்றிய செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன் ஆகியோர் கருப்புக்கொடி காட்டி முழக்கமிட்டனர்.
உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மேலும் போராட்டத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின்,எஸ்.துரைராஜ் டி.சிம்சன்,ஏ.ரவிச்சந்திரன்,சி.விஜயகாந்த் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.